தமிழகம்

வேலூர் ரிதிஷ் சுரேஷ் மறைந்தும் தன் உடல் உறுப்புகளால் 5 பேருக்கு வாழ்வு கொடுத்தார்

67views
வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம் செல்லியம்மன் கோயில்தெருவை சேர்ந்தவர் சுரேஷ், தனியார் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவரது மகன் ரித்திஷ் சுரேஷ் (18) கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.  கடந்த 15-ம் தேதி மாலை இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார்.
உடனடியாக இராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தார் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் , சிறுநீரகம் இராணிப்பேட்டை சிஎம்சிக்கும், மற்றொரு சிறுநீரகம் ரேலா மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும்தானமாக வழங்கப்பட்டன.5 பேருக்கு வாழ்வு தந்த மறைந்த ரித்திஷ்க்கு அம்மா, தந்தை, அண்ணன், தங்கை ஆகியோர் உள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் குடும்பத்தாருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!