தமிழகம்

திருமங்கலம் நகராட்சியில் இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இருந்து திமுக , அதிமுக உள்ளிட்ட 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு

162views
திருமங்கலம் நகராட்சியில் இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இருந்து திமுக , அதிமுக உள்ளிட்ட 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு – வார்டு வரையறை பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாக கூறி , அதனை சீர் செய்து விட்டு கூட்டத்தை நடத்தக் கூறியதால், அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததை யடுத்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
(மொத்தம் உள்ள 27 கவுன்சிலர்களில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையிலும் , அரசு தீர்மானம் என்பதால் ஆணையாளர் தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறி தெரிவித்தார்)
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 கவுன்சிலர்கள் கலந்து கொண்ட அவசர கூட்டம் நகராட்சி தலைவர் ரம்யா தலைமையிலும், துணைத் தலைவர் ஆதவன் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் கலந்து கொண்டு முக்கிய தீர்மானமான வார்டு வரையறை பட்டியலை புதுப்பிக்கப்பட்டுள்ளதை முழுவதுமாக நிறைவேற்றுவதாக கூறி ,
ஒரே ஒரு தீர்மானத்திற்காக அவசர கூட்டம் நடைபெற்ற நிலையில் , அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறும்போது,
திமுக கவுன்சிலர்கள் 11 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் ஆறு பேரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர் .
அதாவது வார்டு வரையறை பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாகவும், ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வார்டில் வாக்குகள் உள்ளதால் அதனை சீர் செய்து விட்டு தொடர்ந்து கூட்டத்தை நடத்தக் கூறியதால் , அதற்கு நகராட்சி ஆணையாளர் மறுப்பு தெரிவித்து அரசு தீர்மானம் என்பதால் அதனை நிறைவேற்றியே தீருவேன் என உறுதியாக கூறியதால், கூட்டத்திலிருந்து 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக ஒவ்வொரு கூட்டத்தின் போதும் பத்திரிகையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வருவதுபோல் இக்கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!