தமிழகம்

வழுதூர் பள்ளிவாசல் திறப்பு விழா அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

34views
ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர். வழுதூர் ஜமாத் தலைவர் இஜட். முஹமது மன்சூர் தலைமை வகித்தார்.
செயலர் சே.மு. அப்துல் ஹக்கீம், மலேசியா ஜமாத் தலைவர் கே.லியாக்கத் அலி, செயலர் வி.சிராஜூதீன், துபாய் ஜமாத் தலைவர் கே.சேகு ஜெய்னுலாபுதீன், செயலர் பி. தாவுத் இபுராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழுதூர் ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் ரஹ்மத்துல்லாஹ் மிஸ்பாஹி கிராத் ஓதி துவங்கி வைத்தார் . விழா குழு ஏ.எம். செயலர் முஸ்தபா கமால் வரவேற்றார்.  விழாக்குழு தலைவர் ஒய்.டி.
முஹமது ஜாஹிர் ஹுஸைன், உப தலைவர் ஜெ.அபுல் கலாம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழக பிற்பட்டோர் நலன், கதர் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம் காதர் மொய்தீன், மாநில பொதுச் செயலர் கே.ஏ.எம் முஹமது அபூபக்கர், பொருளாளர் எம்எஸ்ஏ ஷாஜஹான், நாடாளுமன்ற உறுப்பினர் கே.
நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ( ராமநாதபுரம்),
செ.முருகேசன் ( பரமக்குடி), கரு மாணிக்கம் ( திருவாடானை), அப்துல் சமது, வக்ப் வாரிய முன்னாள் தலைவர் எஸ் ஹைதர் அலி, முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியுமான அ. அன்வர் ராஜா, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில துணை தலைவர் ஐ.முஹமது முனீர், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் கே.தமிமுன் அன்சாரி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.

துபாய் பிளாக் துலீப் எஹியா, இம்ரான் துபாய் ஈமான் கலாச்சார மைய தலைவர் ஹபிபுல்லா கான், பொதுச் செயலர் ஹமீது யாசின், முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.முருகவேல், நயினார் கோவில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சுப.த.திவாகர், மண்டபம் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் ஜெ.தவ்பீக் அலி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வி.ஜி.கனகராஜன், கீழக்கரை நகராட்சி துணை துணை தலைவர் வழக்கறிஞர் வி.எம்.எஸ்.ஹமீது சுல்தான், திமுக அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ஹனிபா, இன்ஜினியர் கபீர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!