தமிழகம்

ராமநாதபுரத்தில் வானவில் மன்றம் திட்டம் துவக்கம்

34views
நடுநிலை வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணிதம் ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது.  ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி பள்ளியில்  வானவில் மன்றத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நடமாடும் அறிவியல், கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவர். 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளை உடன் எடுத்து வருவர்.  அரசு பள்ளிகள் தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளை செய்து, ஆசிரியர்கள் துணையுடன் மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பர் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.
முதன்மை கல்வி அலுவலர் அ.பாலுமுத்து, மாநில கருத்தாளர் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் ஜோ. ரவி, வட்டார கல்வி அலுவலர் ஆர்.ராமநாதன், தொடக்கக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் இ.செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் எஸ்.கர்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, வட்டாரக் கல்வி அலுவலர் பி. மல்லிகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கே.சுந்தரமூர்த்தி, ஆசிரியர் பயிற்றுநர் எஸ். முருகவேல், பள்ளி மேலாண் குழு தலைவர் ஆர்.முத்து பாக்கியம், கல்வியாளர் க.சவுந்தரபாண்டியன், உள்ளாட்சி பிரதிநிதி கு.பஞ்சவர்ணம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எம். சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!