தமிழகம்

உசிலம்பட்டி அருகே கட்டி முடிக்கப்பட்டு 10ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறை.பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

137views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 4வது வார்டைச் சேர்ந்தது கருக்கட்டான்பட்டி கிராமம்.இக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது கழிப்பறை வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து நகராட்சி சார்பில் ரூ15 லட்சம் மதிப்பீட்டில் இலவச பொதுக்கழிப்பறை கட்டப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இதுவரை கழிப்பறை பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு கழிப்பறையை பார்வையிட்ட நகராட்சி அதிகாரிகள் ரூ3 லட்சம் செலவில் கழிப்பறையை மராமத்து பணிகள் செய்துள்ளனர். மாராமத்;துப்பணிகள் செய்யப்பட்ட போதும் இதுவரை கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.மின் வசதி தண்ணீர் வசதி என அனைத்து வசதிகள் இருந்தபோதிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகும் முன் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!