தமிழகம்

உசிலம்பட்டியில் உச்சம் தொட்ட மல்லிகைப்பூ விலைவரத்து குறைவால் கிலோ ரூ4500 முதல் ரூ5000வரை விற்பனை.

34views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் நிலவி வரும் கடும் பொழிவின் காரணமாக வரத்து குறைவால் மல்லிகைப்பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.நேற்று வரை ரூ2500க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ இன்று இருமடங்கு உயர்ந்து ரூ4500 முதல் ரூ5000வரை விற்பனையானது.இதனால் மல்லிகைப்பூ மல்லிகைப்பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தற்போது தைப்பொங்கலை முன்னிட்டு பூக்கள் விலை அனைத்தும் உயர்ந்துள்ளது இதில் மல்லிகைப்பூ ரூ4500 முதல் ரூ5000 வரையும் பிச்சிப்பூ ரூ1800 முதல் 2000 வரையும் முல்லைப்பூ ரூ 2000 முதல் 2200 வரையும் காக்கரட்டான் ரூ1500 முதல் 2000 வரை விற்பனையாகி வருகிறது. பொதுவாக மார்கழி மாதத்தின் போது பனிப்பொழிவின் காரணமாக வரத்து குறைவால் பூக்கள் விலை உயரும்.தற்போது கடும் பொழிவின் காரணமாக பூக்கள் விளைச்சல் இல்லாததால் பூக்கள் வரத்து குறைந்து பூக்களின் விலை உச்சத்தை தொட்டு உள்ளது.மேலும் தைப்பொங்கலை முன்னிட்டு வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!