தமிழகம்

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள்; விசிக தென்காசி நாடாளுமன்ற செயலாளர் வர்க்கீஸ் வாழ்த்து

164views
தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள் புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு IAS மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS ஆகியோருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி நாடாளுமன்ற செயலாளர் மை.வர்க்கீஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுகத்தினர் குடியிருப்பில், கடந்த ஒரு வாரம் முழுவதும் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகளால் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக குழந்தைகள் அதே ஊரில் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அந்த ஊரில் உள்ள குடிநீரில் பிரச்சினை இருப்பதாக கூறியிருக்கிறார்கள், அதனை தொடர்ந்து அங்குள்ள இளைஞர்கள் குடிநீர் தொட்டியில் ஏறி பார்க்கும் போது, அந்த குடிநீரில் மனித மலம் கலந்திருப்பதை, அறிந்து அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள், அதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் – செ.ப. பாவாணன், மாவட்ட துணைச் செயலாளர் திலீபன் ராஜா, நகரச் செயலாளர் அண்ணாத்துரை, ஒன்றிய செயலாளர் பாண்டியன், பாக்கியராஜ், சார்லஸ், நந்தன், காமராஜ் ஆகியோர் சென்று அங்குள்ள மக்களை சந்தித்த பின் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் கோரிக்கை மனு வழங்கினர்.
இதனை அடுத்து சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு IAS மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS விசாரணை மேற்கொண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அந்த கிராமத்தில் தொடரும் தீண்டாமை கொடுமைகள் குறித்து விசாரனை நடத்தினர். அப்போது அந்த கிராமமான வேங்கைவயல் ஊரில் மூக்கையா என்பவர் நடத்தும் டீ கடையில் சாதிய தீண்டாமையுடன் இரட்டை குவளை முறை உள்ளது என்றும் அந்த கிராமத்தில் உள்ள ஊர் கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிப்பதில்லை ஆகிய புகார்கள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு IAS மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS ஆகியோர் முன்னிலை வைக்கப்பட்டது. இதின் உண்மை தன்மையை புரிந்து கொண்ட புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு IAS மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS ஆகியோர் வேங்கைவயல் ஊர் கோவிலுக்குள் பட்டியலின மக்களை பல எதிர்ப்புகளை மீறி அழைத்து சென்றனர்.
கோவிலுக்குள் அழைத்து சென்ற போது சாமி ஆடுவது போல நடித்து பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய கோவில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் மற்றும் சாதிய தீண்டாமையுடன் இரட்டை குவளை முறையை கடைபிடித்த டீ கடை உரிமையாளர் மூக்கையா மீதும் SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு இருவரையும் கைது செய்து சிறை அனுப்பினர். இந்த பிரச்சனைகளை வெளியே கொண்டு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுகோட்டை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர், செ.ப. பாவாணன், மாவட்ட துணைச் செயலாளர் திலீபன் ராஜா, நகரச் செயலாளர் அண்ணாத்துரை, ஒன்றிய செயலாளர் பாண்டியன், மேலும் தோழர்கள் பாக்கியராஜ், சார்லஸ், நந்தன் காமராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதோடு, தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள் புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு IAS மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS ஆகியோருக்கு தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!