தமிழகம்

திருமங்கலம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய, கம்பீரமாக தோற்றம் அளிக்கும் சார் பதிவாளர் அலுவலகத்தை, தங்களது கிராமத்தை விட்டு மாற்றக்கூடாது எனக்கூறி , கிராம மக்கள் அலுவலகம் முன்பு போராட்டம் மற்றும் எட்டு கிராமத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் , ஊராட்சி தலைவர்கள் உட்பட உண்ணாவிரத போராட்டம்.

149views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்து பட்டி கிராமத்தில் , ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சார் பதிவாளர் கட்டிடத்தை , அருகில் உள்ள கிராமத்திற்கு மாற்றுவதாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்டித்து, காளப்பன்பட்டி /சிந்துப்பட்டி, தும்மக்குண்டு உள்ளிட்ட 8 கிராமத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சார் பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிந்து பட்டி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இங்கு உள்ள சார் பதிவாளர் கட்டிடம் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டி முடித்து , இதுவரை அந்த கட்டிடம் ஒரு துளி அளவு கூட சேதம் இல்லாமல் கம்பீரமாக தோற்றமளிக்கப்பட்டு வரும் நிலையில்,
அந்த கட்டிடம் சேதம் அடைந்துள்ளதாக கூறி சிலர் சுயநலம் கருதி, அருகில் உள்ள கிராமத்திற்கு இந்த அலுவலகத்தை மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்டித்து , கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் , தமிழக முதல்வர் மக்களுக்காக அரசு என்பதை கூறிவரும் நிலையில், இப்பகுதி மக்களின் நலன் கருதி, இந்த சார் பதிவாளர் அலுவலகத்தை இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றாமல் இருப்பதற்கு உண்டான நடவடிக்கையை முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!