தமிழகம்

யுகேஜி பயின்ற குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி மழலைக் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் கௌரவிப்பு – பட்டப்படிப்பு முடித்தவர் போன்று ஆடை அணிவித்தும், தலையில் தொப்பி அணிவிக்கப்பட்டும் சான்றிதழ் வழங்கல்.

161views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடி பகுதியில் உள்ள, புனித இருதய நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், யுகேஜி கல்லி முடித்து 1 ம் வகுப்பிற்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட மழலைக் குழந்தைகளை கௌரவித்து வரவேற்கும் விதமாகவும், அவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி பள்ளி நிர்வாகம் புதுமையாக செயல்படுத்தியது.
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மஞ்சள் நிற ஆடை(கவுன்) அணிவித்தும் , சிவப்பு நிற தொப்பி அணிவித்தும்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பது போன்று ,  இந்த சின்னஞ்சிறு மழலை குழந்தைகளுக்கும் அதே போல் ஆடை, தொப்பி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!