உலகம்

துபாய் டிவைன் பிளாக் மஜ்லில் மீலாது விழாவில் நூல் வெளியீடு

26views
துபாய் :
துபாய் டிவைன் பிளாக் மஜ்லில் மீலாது விழா மிகவும் சிறப்பாக நடந்தது.
இந்த விழாவுக்கு மஜ்லிஸின் தலைவர் முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூப் தலைமை வகித்தார்.
அவர் தனது உரையில் மீலாது விழாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து ஈரோடு ஈ . கே .எம். தாஜ் எழுதிய ‘நபிமொழி கருத்துக்கோவை’ என்ற நூலை வெளியிட முதல் பிரதியை காயல்பட்டணம் டாக்டர் செய்யது முகம்மது பெற்று கொண்டார்.
விழாவில் தஞ்சாவூர் கவுஸ், ஷேக் தாவூத், ஷேக் அப்துல்லா, காயல் அவுலியா ஹஜ்ரத், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!