உலகம்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கிரீன் குளோப் முயற்சியில், ஜூமேரா கடற்கரை பகுதியில் நடைபெற்ற தூய்மை பணி

21views
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, துபாய் மாநகராட்சி உதவியுடன் , சமூக நல அமைப்பான கிரீன் குளோப் முயற்சியில், “An Hour With Cleaning Engineer” என்னும் தலைப்பில்,ஜூமேரா கடற்கரை பகுதியில்,நேற்று (07.06.2026) மாலை தூய்மை பணி உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
கிரீன் குளோப் நிறுவனரான ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏராளமான குடும்பங்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான சிகரெட் துண்டுகளை சேகரித்தனர்.

துபாய் முனிசிபலிட்டி சார்பில் நசீர் அவர்கள் கலந்து கொண்டு இந்த சமூகப் பணிக்கு பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுச்சூழல் துறையில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வரும் நாராயணன் ராகவன், அப்துல் காதர் மற்றும் சமூக சேவகர் மீடியா
சுப்பு ஆகியோர் கலந்து கொண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு என்பதை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
மேலும், உலக சாதனையாளர் சுஜிதாபிரியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேரடி ஓவிய (Live Art) நிகழ்ச்சியை நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிரீன் குளோப் உறுப்பினர்களான அபூபக்கர், பீர் முஹம்மது, சபீர் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும், சமூகப் பொறுப்புணர்வும் ஒன்றிணைந்த இந்த நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், நிகழ்வின் நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!