தமிழகம்

கப்பலூர் சுங்கச்சாவடி – யை அகற்றக்கோரி, நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு – சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு , மதுரை வரும் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் .

44views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை விதிமுறையை மீறி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இங்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் , விதிமுறையை மீறி அமைத்துள்ள சுங்கச்சாவடி – யை அகற்றக் கோரி, கடந்த பல ஆண்டுகளாகவே திருமங்கலம் நகர் வேன், டாக்சி ஓட்டுநர்கள் ,தொழிலதிபர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் போராடி வரும் நிலையில்,
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் கட்டண விலக்கை சுங்கச்சாவடி நிர்வாகம் அளித்துள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் நகரில் சுங்கச்சாவடி – யை அகற்றுவது குறித்து, வியாபாரிகள் ,தொழிலதிபர்கள், வேன், டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அடுத்த கட்ட போராட்டமாக நாளை (08.12.22) உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ள நிலையில், நாளை மதுரை வழியாக தென்காசி செல்லும் தமிழக முதல்வரை இந்த ஒருங்கிணைப்பு குழு சந்திக்க திட்டமிட்டுள்ளதால், போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!