தமிழகம்

ராமநாதபுரம் மக்களுக்கு தமுமுக, மமக சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் உதவி எம்எல்ஏ வழங்கினார்

33views
ராமநாதபுரத்தில் தமுமுக மாவட்ட அலுவலகம் திறப்பு, சிறுதொழில் உதவி வழங்கும் விழா நடந்தது.  சிறு வயதில் திடீர் மரணம் அடைந்த ஆலிம் ஜமால் என்பவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம்,  விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட ராமநாதபுரம் ஆர்.எஸ். மடை ஆட்டோ டிரைவர் சேகருக்கு ரூ.10 ஆயிரம், ராமநாதபுரம் பாத்திமா என்பவருக்கு ஆபரேஷனுக்கு ரூ.55 ஆயிரம்,
ராமநாதபுரம் ஷபினா, கொட்டியகாரன் வலசை உசேன் எலும்பு முறிவு சிகிச்சைக்கு தலா ரூ.5 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் நஸ்ரியா, காலித், அப்துல் ரஹ்மான், ஜாபர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் சிறு தொழில் உதவி வழங்கப்பட்டது. ஐந்து பேருக்கு தலா 6 ஆயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரம்
வழங்கப்பட்டது. ரூ.2 லட்சம் மதிப்பிலான இந்நலத்திட்ட உதவிகளை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது வழங்கினார்.  தமுமுக மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ் கான், மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா, சம்சுதீன் சேட், வழக்கறிஞர் ஆசிக், இபுராஹிம் வாவா ராவுத்தர், பட்டாணி மீரான், ஷேக் அப்துல்லா ராமநாதபுரம் மத்திய மாவட்ட நிர்வாகிகள் தமுமுக மாவட்ட செயலாளர் கே.அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலாளர்
எம்.முஹமது ஆசிக் சுல்தான், தமுமுக மமக மாவட்ட பொருளாளர் ஹமீது சபீக், பரகத்துல்லாஹ், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.சாகுல் ஹமீது, ஜெ.மைதீன் ராஜா, எம்.சுலைமான்,
மமக மாவட்ட துணை செயலாளர்கள் பி.ஷேக் முஹமது, எஸ்.ஜாகீர் பாபு, ராமநாதபுரம் நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஹாஜா சுகுபுதீன், தொண்டரணி மாவட்ட செயலாளர் எம்.முஹமது நய்னா, மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ். முஹமது பயாஸ் கான், ஊடக அணி மாவட்ட செயலாளர் எஸ்.யாசர் அரபாத், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஏ.ரஜப் ரஹ்மான், இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்ட செயலாளர் மில்லத் ஃபிர்தவ்ஸி, மண்டபம் ஒன்றிய தமுமுக, மமக தலைவர் செய்யது உசேன், தமுமுக ஒன்றிய செயலாளர் சகுபர், மமக ஒன்றிய செயலாளர் சகுபர், ஒன்றிய பொருளாளர் ரியால் தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!