தமிழகம்

திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

98views
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஸ்ரதிரு அண்ணாமலையார்கோவிலில் விடியற்காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சிக்கு
நேற்று கொண்டு செல்லப்பட்ட 5 1/2 அடி உயர கொப்பரையில் 4,500 கிலோ ஊற்றப்பட்டு 1,150 மீட்டர் காடா துணியால் திரி அமைக்கப்பட்டு மாலை 6 மணிக்கு அண்ணாமலையாருக்கு அரோகரா, அரோகரா என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டது.

சுமார் 15 கிலோமீட்டர் சுற்றுப்புற பொதுமக்கள், பக்தர்கள் கைகூப்பி அரோகரா, அரோகரா என்று சொல்லி வணங்கினர்.திருவண்ணாமலைமட்டும் அல்ல தமிழகம் முழுவதும் வீடு, கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர். சுடர்விட்டு எரியும் இந்த மகாதீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரியும்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!