தமிழகம்

பூமலைக்குண்டு ஸ்ரீவைகுண்ட ஏகாதேசி தேர்த்திருவிழா முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டிகள்

497views
தேனி மாவட்டம்/வட்டத்திற்கு உட்பட்ட பூமலைக்குண்டு கிராமத்தில் ஜன.2,3 மற்றும் 4ம் தேதிகளில் ஸ்ரீவைகுண்ட ஏகாதேசி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டிகள் நடைபெற்றது.
கிராமப்புற மாணவர்கள் கலை மற்றும் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக பூமலைக்குண்டு கிராம வாழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏகாதாசி தேர்த்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இரண்டாம் ஆண்டு ஓவியப் போட்டிகள் பூமலைக்குண்டு துளசிதேவி சிற்பக் கலைக்கூடத்தின் கலைச்சுடர்மணி சிற்பி ஆர்.ஜெயராம் மற்றும் ஓவியர்.கோபிகிருஷ்ணன் ஆகியோர்களது ஏற்பாட்டின் பெயரில் ஊர் நாட்டாமை, முகாமைக்காரர்கள், கிராம கமிட்டி மற்றும் ஊர்பொதுமக்களது முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் கண்காட்சி மற்றும் பேச்சுப் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவினை ஒட்டி நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக எல்இடி டிவி மற்றும் பாராட்டு கேடயமும் இரண்டாம் பரிசாக டிராவல் பேக் மற்றும் பாராட்டு கேடயமும், மூன்றாம் பரிசாக பேக் மற்றும் பாராட்டு கேடயமும் வழங்கி போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
போட்டியின் நடுவர்களாக இந்திய அளவில் முதல் கூழாங்கல் சிற்பி, சிற்ப கலைபூசன் போடி செல்வம், கடமலைக்குண்டு ஓவிய ஆசிரியர் முருகேசன் மற்றும் கலைவேந்தன் தஞ்சாவூர் ஓவியர், காமாட்சிபுரம், ஏவிஎம்.சக்திவேல் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக சிறப்பாக பங்காற்றினர்.
தேனி தேவா சீட் கவர்ஸ், சின்னமனூர் சேர்ந்த நியூவசந்தம் ஏஜென்சி, பாண்டியராஜ் ஹார்டுவேர்ஸ், சுந்தர் டூல்ஸ்,படையப்பா டைல்ஸ் ஆகியோர் இணைந்து மூன்று பிரிவுகளுக்காக மூன்று வெற்றியாளர்களுக்கு முதல் பரிசான எல்இடி தொலைக்காட்சி பெட்டிகளுடன் பாராட்டு சான்றிதழ் கேடயங்களையும் வழங்கி சிறப்பித்தார்கள்.
சின்னமனூர் சாய் டிரேடர்ஸ், டொம்புச்சேரி முல்லை நர்சரி கார்டன், பூமலைக்குண்டு பிரித்தா டெக்ஸ்டைல் மற்றும் ஏஎஸ்.ராஜன் ஆகியோர் இணைந்து மூன்று பிரிவுகளுக்காக மூன்று வெற்றியாளர்களுக்கு இரண்டாம் பரிசுகளை வழங்கினார்கள்.
பூமலைக்குண்டு ஆர்த்தி ஸ்ரீ ஆட்டோ, எரக் கோட்டைபட்டி வடிவேல் ஆகியோர் இணைந்து மூன்று பிரிவுகளுக்காக மூன்று நபர்களுக்கு மூன்றாம் பரிசுகளை வழங்கினார்கள்.
போட்டியானது 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு ஆஞ்சநேயர் படமும், 11ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணாக்கர்களுக்கு திருப்பதி படமும், ஓவியக்கலை பிரியர்களுக்கு என்று ஒரு படமும் எனவாக ஓவியப் போட்டியாளர்களுக்கு தனித்தனி படங்களுடன் போட்டிகள் ஊர் பொதுத்திடலில் நடைபெற்றது பங்கு கொண்ட மாணாக்கர்களது பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் போட்டியை கண்டு களித்து பங்கேற்ற அனைவருக்கும் ஓவியப்போட்டித் திருவிழா விளையாட்டு குழுவிற்கும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!