தமிழகம்

பொதுமக்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம்; குற்றங்களை தடுக்க நடவடிக்கை – தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி உறுதி

61views
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து சரியான முறையில் தீர்வு காணப்படும் என்றும், குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், தென்காசி மாவட்டத்தின் புதிய எஸ்.பி சாம்சன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சாம்சன் IPS 13.01.2023 வெள்ளிக் கிழமையன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பி சாம்சன் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப் பேற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குற்றங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். குற்றங்களை கண்டுபிடிக்க நடவடிக்கை துரிதப்படுத்தப்படும். போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை சரியான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள்களை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில எல்கையில் உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். அங்கு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட எஸ்.பி சாம்சன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!