தமிழகம்

வேலூர் சங்கரன்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாட்டில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்பு

15views
வேலூர் சங்கரன்பாளையம் அருள்மிகு ஸ்ரீகொண்டையம்மன் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் இன்னிசை வாத்தியம், வான வேடிக்கை மற்றும் சீர் தட்டுகளுடன் ஸ்ரீவிநாயகர் ஆலையத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கு தனப் பால் பிள்ளை சேட்டு கவுண்டர் தலைமை தாங்கினர். ஹரி துளசிராமன், டாக்டர் விஜய், லட்சி, தனசேகர், சுரேந்திரன், கோகுல், தமிழ்மணி, மாநகராட்சி கவுன்சிலர் தவமணி தாமோதிரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
அன்னதானத்தை முன்னாள் கவுன்சிலர் தாமோதிரன், கவுன்சிலர் தவமணி தாமோதிரன், கிருஷ்ணன், சீனிவாசன் குடும்பத்தினர் வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மகேஷ் , சதீஷ் குழுவினர் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!