தமிழகம்

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

180views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம் நடைபெற்றது. விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு ரவிச்சந்திர பட்டர் பரசுராம சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் பால், தயிர், நெய், வெண்ணெய், இளநீர், சந்தனம், விபூதி உட்பட பல்வேறு அபிஷேகங்களை செய்தனர்.
தொடர்ந்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் பாடி முருகப்பெருமானை வழிபட்டனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதே போல தென்கரை அகிலாண்டேஸ்வரி , மூல நாத சுவாமி கோவிலிலும் முருக பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து கந்த சஷ்டி விழா துவங்கப்பட்டது. சோழவந்தான் பகுதியில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் நேற்று காலை சூரிய கிரகணம் என்பதால் கோவில் சன்னதிஅடைக்கப்பட்டு பின்பு மாலை திறந்து கிரகண சாந்தி செய்து முருகப்பெருமானின் கந்த சஷ்டி விழா தொடங்கப்பட்டது.
செய்தியாளர்: வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!