தமிழகம்

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் கோவிலுக்கு சீல் வைக்க சென்ற மண்டல துணை வட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள். இரண்டு மணி நேர போராட்டத்தை பின்பு கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

160views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மேல தெரு கீழத்தெரு என பிரித்து 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஓராண்டு மேல தெருவுக்கு மற்றொரு ஆண்டு கீழ தெரு என பிரித்து சாமி கும்பிட்டு வருகின்றனர் இதில் சாமி கும்பிடுவதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை வளத்த நிலையில் நேற்று ஒரு பிரிவினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து இரு இருதரப்பினரையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பீஸ் கமிட்டி மீட்டிங் நடத்தி தற்காலிகமாக கோவிலை மூடி சீல் வைப்பது என்று இருதரப்பு ஒரு நாட்டாமை மற்றும் பொதுமக்கள் சார்பில்பேச்சுவார்த்தை நடந்தது இதில்  நீதிமன்றம் மூலம் வழக்கு தீர்ப்பு வந்த பின் கோயிலை திறந்து கொள்ளலாம் என முடிவெடுத்து கையெழுத்து போட்டுள்ளனர் அதன் அடிப்படையில் இன்று கோவிலுக்கு சீல் வைக்க இராஜபாளையம் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் சென்ற பொழுது அவரை முற்றுகையிட்ட பெண்கள் கோயிலுக்கு சீல் வைக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சில பெண்கள் சாமி வந்து கோவிலுக்கு சீல் வைக்கக் கூடாது சீல் வைத்தால் விளைவுகளை சந்திப்பீர்கள் என கோரியும் பிரச்சினை ஈடுபட்டனர் காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி கோவிலுக்கு சீல் வைத்து செல்கிறோம் நீங்கள் நீதிமன்றம் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது’
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!