தமிழகம்

திருமங்கலம் பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் குறைந்த விலை மது பாட்டில்கள் , தனிப்பட்ட நபருக்கு பதுக்கல் செய்து அனுப்புவதாக குடி பிரியர்கள் குற்றச்சாட்டி, மதுபான கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

155views
(குறைந்த விலை மதுபாட்டில்களை தனிப்பட்ட நபர் மொத்தமாக பெற்றுக்கொண்டு , கிராமங்களில் இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு)
மதுரை மாவட்டம் திருமங்கலம், புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகளில் குறைந்த விலை மது பாட்டில்களை , மது பிரியர்களுக்கு விற்பனைக்கு வழங்காமல் , தனிப்பட்ட நபர்களுக்கு அதிக விலைக்கு விற்க, கடை விற்பனையாளர்கள் பதுக்கி வைப்பதால் , மது பிரியர்கள் குறைந்த விலை மது பாட்டில்களை பெற முடியாமல் குற்றம் சாட்டி, மதுபான கடை முன்பு அமர்ந்து மது பிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் மற்றும் பன்னிக்குண்டு ,காங்கேய நத்தம், செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் ஹனி பீ 130/- ரூபாய்க்கு விற்கப்படும் சரக்குகள் , மொத்தமாக தனிப்பட்ட நபர்கள் அதனை 140/- ரூபாய்க்கு அனைத்து மது பாட்டில்களையும் பெற்றுக்கொண்டு , கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் கிராமப்புற பகுதிகளில் குறைந்த விலை மது பாட்டில்கள் கிடைக்காமல், கூலி தொழிலாளிகளான மது பிரியர்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர். இது குறித்து அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவும் தனிப்பட்ட நபர்களின் வருமானத்தை பெருக்குவதற்கு, மதுபான கடை விற்பனையாளர்கள் உறுதுணையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!