தமிழகம்

தமிழகத்தில்.நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் – மதுரையில் அதிமுக தற்காலிக அவைதலைவர் தமிழ் மகன் உசேன் பேட்டி

94views
தமிழகத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75 தர்காக்களில் அதிமுகவின் தற்காலிக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள தற்காக்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக மதுரைமேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவேடகம் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம்.கூறும் போது தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் நடத்த இறைவன் அருள் புரிய வேண்டும்.

தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும்.  தமிழகத்தின் தன்னிகரில்லா.முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்க வேண்டும்.  இந்தியாவிலே இருக்கின்ற பத்து மாநிலங்களில் உள்ள தற்காக்களிலும் சிறப்புத் தொழுகையில் ஈடுபட உள்ளதாகவும் சிறப்பு வழிபாடு எனும் தூ.ஆ நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் துவங்கி இருப்பதாகவும் இதுவரை 42 மாவட்டங்களை வழிபாடு முடித்துவிட்டு இது 43 வது மாவட்டமாக துவங்கி இருப்பதாகவும், ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெங்களூர் சிறைச்சாலையில் இருக்கும் போது பெங்களூர் சிறைச்சாலைக்கு சென்று கடிதம் கொடுத்துவிட்டு 126 தற்காக்களில் சிறப்பு வழிபாடு நடத்தியதன் பலனாக அம்மா விடுதலை பெற்றார்கள் எனவும் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி மாண்புமிகு அம்மா அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெறும் 51 திருமணங்கள் இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!