தமிழகம்

நான் யாரிடமும் ஒருதலை பட்சமாக செயல்படுவதில்லை. -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

98views
தென்காசியில் தனியார் நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
ஆன்லைன் சூதாட்டம் விவகாரத்தில் ஆளுநர் செயல்பாடு குறித்த கேள்விக்கு
ஆளுநர் அரசாங்கத்திடம் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். முற்றிலுமாக அதில் அவர் திருப்தி அடையாததால் தான் தாமதமாகிறது ஆளுநருக்கு சந்தேகம் எழுப்ப உரிமை உள்ளது. ஆளுநர்கள் மசோதா வந்தவுடன் கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் அதற்கான விளக்கங்களை கேட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடு படலாம் என்று நான் நினைக்கிறேன்.
தமிழக ஆளுநர் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு
அது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி. நான் யாரிடமும் ஒருதலை பட்சமாக செயல்படுவதில்லை.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!