தமிழகம்

வேலூரில் தமிழக எழுத்தாளர் சங்கம் சார்பில் கவிஞர்களுக்கு பாராட்டு விழா

96views
வேலூர் கேரள சமாஜ் மண்டபத்தில் தமிழக எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர் ம.நாராயணன், ஆற்காடு கவிஞர் மா. ஜோதி, முனைவர் பட்டம் பெற்ற கவிஞர் ச.லக்குமிபதி ஆகியோருக்கு பாராட்டு விழாவும், பொங்கல் விழாவும் நடந்தது. கவிஞர் பிரவீன்ரவி வரவேற்றார். தொடக்க உரையை நாடக சிற்பி வேலூர் ராதாகிருஷ்ணன் ஆற்றினார்.ரா.சீனிவாசன், எஸ்.ரமேஷ்கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கவிஞர் அ.பெர்னார்ட்ஷா தலைமை தாங்கினார் திருப்பத்தூர் தூயநெஞ்சகல்லூரி தமிழ்த்துறை தலைவர் பொன்.செல்வக்குமார் சிறப்புரையாற்றினார்.
கவிஞர்கள் பாரிதாசன், வேல்முருகன், ரமேஷ், பொறியாளர் வெங்கடேசன், சாந்தா, கார்த்திகேயன், சம்பத் ஆகியோர் பேசினர். கவிஞர் கோ.ராஜேந்திரன் நன்றி கூறினார். ஏற்பாட்டை தமிழக எழுத்தாளர் சங்க தலைவர் பெர்னார்ட்ஷா, செயலாளர் பாரிதாசன், பொருளாளர் வேலூர் ராதாகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!