இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமனம்
நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்து விட்டதால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட் டுள்ளது. இடைக்கால அதிபராக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்யப் பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த மார்ச் முதல் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 4 நாட்களுக்கு...