புதுசா ஒரு பிறந்த நாள்…
கார் பொறுமையாக சென்று கொண்டிருந்தது . காரை ஓட்டிக் கொண்டிருந்த முருகேசன் திரும்பி மனைவியை பார்த்தார் ..அவளது முகத்தில் ஏகப்பட்ட சலணம். வழக்கத்திற்கு மாறாக வாய்மூடி வரும் கௌசல்யாவின் மௌனம் அவர் அவரை கலவரப்படுத்த “என்ன கௌசல்யா !என்ன ஆச்சு ?உடம்பு சரியில்லையா ?” அவரது கேள்வியில் சற்று நிதானப்பட்டவள், “இன்று கோர்ட்ல ஒரு கேசுங்க... ரெண்டு பேரும் காதல் திருமணம் செய்து இரண்டு வருஷம் ஆகுது .அதுக்குள்ள டைவர்ஸ்...