தமிழகம்

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை

124views
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கணிதமன்றம் சார்பாக இராமானுஜன் பிறந்தநாளை முன்னிட்டு 1.12 2022 அன்று நிலக்கோட்டையில் மாபெரும் கட்டுரை போட்டிகள் நடைப்பெற்றது.
நடுநிலைப்பள்ளி அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ரா.பார்க்கவி இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார்.
வருடந்தோறும் மாவட்ட அளவில் நடைபெற்று வரும் பல போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு வகையான சாதனைகள் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி ரா.பார்க்கவிக்கும், மாணவிக்கு பயிற்றுவித்த கணித பட்டதாரி ஆசிரியர் ஜான் சாம்சன் ஆகிய இருவரையும் பள்ளியின் தாளாளர்,தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என அனைவரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!