தமிழகம்

பிரதமர் மோடியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் கே வி பள்ளி மாணவி அஸ்வினி “தேர்வுகள் குறித்து பெற்றோர்கள் தங்களிடம் கருத்து திணிப்பு குறித்து கேட்ட பதில்-மாணவி பேட்டி.

53views
மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலாய பள்ளி + 2 மாணவி அஸ்வினி சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி-  திருப்பரங்குன்றம் பகுதியில் கேந்திரிய வித்யாலாய பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறேன் எனது பெயர் அஸ்வினி  இன்று நடைபெற்ற பரிகக்ஷா பே சார்ச்சா (தேர்வுகள் குறித்த பயம், கருத்து திணிப்பு) நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.  இதில் நாளுக்கு நாள் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பினேன். அதற்கு பிரதமர் மோடி கூறும்போது கிரிக்கெட் மைதானத்தில் சுற்றி ஆயிரகணக்கானவர்கள் உள்ளவர்கள். 4 ரன், 6 ரன் அடிங்க என சொல்லுவாங்க ஆனா அந்த பேட்ஸ்மேன் கவனம் ஃபுல்லா அந்த பால்ல தான் இருக்கணும் அப்படி இருந்தா மட்டுமே தான் 4 ரன்,6 ரன் அடிக்க முடியும்.
அதுபோல நமது முழு கவனமும் கோல் மேல தான் இருக்க வேண்டும் நம்மளை சுற்றி இருப்பவர்கள் சொல்வதை ஊக்கமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பின்னடைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், அதேபோல் பெற்றோர்களும் கூறுவதை ஊக்கப்படுத்துவதாக மட்டுமே தான் எடுத்துக் கொள்ள வேண்டும். என பிரதமர் கூறிய பதிலில் நான் புரிந்து கொண்டேன் என மாணவி அஸ்வினி கூறினார்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!