தமிழகம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் பல ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்காததை கண்டித்து சீருடை அணியாமல் பணி

90views
தொழிற்சங்கங்கள் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவையின் ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு இரண்டு சீருடைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக ஒப்பந்தத்தில் பேசப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு செட் சீருடை என்பது அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்க வேண்டும். அதற்கு பின் 2016 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசின் சார்பில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு நான்கு சீருடைகள் வழங்குவதாக அறிவித்தார். அறிவித்த அடுத்த ஆண்டு 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சீருடை என்பது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பின் 2019 ஆம் ஆண்டு ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கப்பட்டது.
2020 முதல் 2022 தற்போது வரை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை என்பது வழங்கப்படவில்லை இந்த அடிப்படையில் பல கட்ட போராட்டங்களை போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த நிலையில் சிஐடியு அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கனக சுந்தர் கூறுகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சீருடை வழங்க கோரி பழகட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சீருடை வழங்க கோரி சிஐடியு அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் சார்பில் போக்குவரத்து நிர்வாகத்திற்கு கடிதம் என்பது வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1. 11. 2022 அன்று போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு சீருடை வழங்க கோரி கடிதம் நினைவூட்டல் கடிதம் என்பது வழங்கப்பட்டது அப்போதே 1. 12. 2022 முதல் நாங்கள் சீருடை இல்லாமல் கலர் சீருடையில் பணி செய்யப் போவதாக கடிதம் கொடுத்துள்ளோம் அதனைத் தொடர்ந்து போக்குவரத்துக் கழக நிர்வாகம் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலையில் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்காததை தொடர்ந்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 1. 12. 2022 முதல் கலர் சீருடைகள் அணிந்து பேருந்துகளை இயக்குவது என்று முடிவு செய்துள்ளதாக அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கனகசுந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அந்த அடிப்படையில் இன்று கண்டிப்பான முறையில் சீருடை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் சீருடை அணியாமல் மாற்று உடையில் பேருந்துகளை இயக்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
மதுரையில் 5500 போக்குவரத்து தொழிலாளர்கள் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் அலுவலர்கள் அதிகாரிகள் என்று பணியாற்றி வருகிறார்கள். இதில் 700 பேர் சீருடை அணியாத பணியாளர்கள் மற்ற அனைவரும் சீருடை பணியாளர்கள் இதில் ஓட்டுநர் நடத்துனர் 2800 பேர் இரண்டு ஷிப்டுகளாக பேருந்துகளை இயக்குகிறார்கள். 700 பேருந்துகளில் ஓட்டுநர் நடத்துனர் என்று முதல் ஷிப்டுகள் 1400 பணியாளர்கள் காலையிலும் மதியம் 1400 ஓட்டுநர் நடத்துனர் என்று பணியாற்றி வருகிறார்கள். 200 பேர் ஒரு சிப்ட் ஓட்டுநர்கள் அவர்கள் காலையில் பேருந்தை இயக்கி மாலையில் பேருந்தை நிறுத்துவார்கள் அந்த அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!