தமிழகம்

திருமங்கலம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள், மாநில அளவில் நடைபெறும் ஜூடோ, குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு – திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஊக்கத்தொகை அளித்து கௌரவிப்பு.

278views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகள், சமிக்ஷா , பூமாரி ஆகிய இருவர் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் ஜூடோ பிரிவு மற்றும் குத்துச்சண்டை பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், ஊக்க தொகையாக ரூபாய் 5000/- வீதம் அளித்தும்,சால்வை அணிவித்தும் கௌரவப்படுத்தினார்.அரசு பள்ளி மாணவிகள், இதுபோன்ற தற்காப்புக் கலைகளிலும் முன்னிலை பெற்று வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!