தமிழகம்

அலங்காநல்லூர், பாலமேட்டில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக வினர் ஆர்ப்பாட்டம்

89views
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகரச் செயலாளர் அழகுராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், துணைச் செயலாளர் சம்பத் ஒன்றியக் கவுன்சிலர் ரேவதி, பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், அய்யூப் நடராசன். வெள்ளை கிருஷ்ணன், கேட்டுகளஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும், திமுக அரசு தொடர்ந்து வாக்களித்த மக்களை வஞ்சித்து வருதாகவும், அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து ஊர்ந்து கொண்டே உள்ளது. மின் கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. எனவே, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று , பாலமேடு பேரூர் கழகம் சார்பில் நகர் செயலாளர் குமார் தலைமையில் பேரூராட்சி துணை சேர்மன் ராமராஜ், முன்னாள் பேரூர் செயலாளர் ஆறுமுகம், ராஜவேல் பாண்டியன், சேகர் ஆகியோர் முன்னிலையில் பாலமேடு பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி வரும் தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!