தமிழகம்

குச்சனூரில்,பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

117views
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், குச்சனூர் பேரூராட்சியில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக,பொது விநியோகத்திட்ட மக்கள் குறை தீர் கூட்ட சிறப்பு முகாம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி தலைமையில் குச்சனூர் பேரூராட்சி தலைவர் பி.டி.ரவிச்சந்திரன், துணை சேர்மன் மணிகண்டன், ஆகியோரது முன்னிலையில் உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மேற்பார்வையில் குச்சனூர் பேரூர் காவல் சாவடியில் நடைபெற்றது.
டிச.10,காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,நீக்குதல், முகவரி மாற்றம், உறுப்பினர் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளுக்கும் கணினி இயக்குநர் ரவியால் உடனடி தீர்வு காணப்பட்டது.
பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர் முகாமில், ஸ்மார்ட் கார்டு எனப்படும் குடும்ப அட்டை வைத்திருக்கும் குச்சனூர் பேரூர் வாழ் மக்கள் ஏராளமானோர் இந்த முகாமை பயன்படுத்தி உடனடி தீர்வு கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!