தமிழகம்

ஆண்டிபட்டி அருகே ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரமம் பள்ளியில் விண்வெளி தொலை நோக்கி மூலம் வான்வெளி அதிசயங்களை மாணவர்களும் பொதுமக்களும் கண்டு களித்தனர்.

55views
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஜெய் கிரிஸ் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளியில் ஸ்கை அப்சர்வேஷன் டே அனுசரிக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியை பள்ளித்தாளாளர் முருகன் மற்றும் கயல்விழி முருகன் தலைமைதாங்கி துவக்கி வைத்தனர் . பள்ளிமுதல்வர் ராஜேஸ்வரி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார் . ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளியில் ஸ்கை அப்சர்வேஷன் டே கொண்டாடப்படுவது வழக்கம் . இதன்மூலம் வான்வெளியில் உள்ள அற்புதங்களையும் கோள்களையும் கிரகங்களையும் பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்படும் . அதன் ஒருபகுதியாக இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது .
முதலில் விண்வெளி குறித்த விளக்கத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தனியாக ஒருஅறையில் விண்வெளி அமைப்பு , சூரியகுடும்பம் , கோள்கள் குறித்து தத்ரூபமாக வடிவமைப்பு செய்யப்பட்டு இருந்தது . அதற்கு முன்னதாக பள்ளிக்கு வந்த பார்வையாளர்களுக்கு சூரியகதிர் காப்பு கண்ணாடிகள் மூலம் வான்வெளியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இதையடுத்து கடந்த காலங்களில் விண்வெளிக்கு சென்ற நமது இந்தியவீரர்கள் மற்றும் 7 சப்த ரிஷிகளின் படங்களும் வைக்கப்பட்டிருந்தன . அடுத்து நபுலா எனப்படும் வாயுமண்டலம் , சூரியமண்டலம் எரிகற்கள் , நிலா , துணைகோள்கள் ஆகியவை குறித்தும் அதற்கான அமைப்புகளும் வைக்கப்பட்டிருந்தன .
இந்த அமைப்புகளை பள்ளி ஆசிரியர்கள் பார்வையாளர்களுக்கு ஒவ்வொன்றாக கூறி விளக்கினார்கள் . இதை அடுத்து பள்ளி மைதானத்தில் பெங்களூரில் இருந்து பிரத்தியேகமாக 5 லட்ச ரூபாய் செலவில் வரவழைக்கப்பட்ட விண்வெளி தொலைநோக்கி மூலம் இரவில் தெரியும் நிலா , நட்சத்திரங்கள் , துணைகோள்கள் , வான்வெளி உள்ளிட்டவைகளை மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் வெறும் கண்களால் துல்லியமாகவும் உற்சாகமாகவும் கண்டு ரசித்தனர் .
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!