தமிழகம்

மாநில சிலம்பம் போட்டிக்கு தகுதி மாணாக்கருக்கு பாராட்டு

124views
மதுரை மண்டல கலை பண்பாட்டுத்துறை, ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவி யருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குடியரசு தினம், பாரதியார் தின விழாவை நடந்த 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தொருவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஜெயபிரகாஷ் , 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கிருஷ்ணபிரசாத், ஏவிஎம்எஸ் மெட்ரிக்பள்ளி மாணவி ஹாரிணி, 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கீழக்கரை முகைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹரினி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் தருண் ஆகியோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். ராமநாதபுரம் டி.டி. விநாயகர், மேல்நிலைப் பள்ளி மாணவர் பத்ரிஸ், மாணவி தனுஷ்கா, ராமநாதபுரம் ஏவிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி மாணவி பார்கவி, மாணவன் நவீன்குமார், ராமநாதபுரம் புனித பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி திரிஷா ஆகியோர் 2 ஆம் இடம் பிடித்தனர்.
ராமநாதபுரம் டி.டி விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மகிஷாலினி, கஷ்மாஜெயஸ்ரீ, யுத்திகாஸ்ரீ, மாணவர்கள் லோகேஸ்வரன், சுப்ரமணிநாதன், ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய மெட்ரிக் பள்ளி மாணவர் செல்வநிதின் ஆகியோர் 3 ஆம் இடம் பிடித்தனர். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகள், ஜவகர் சிறுவர் மன்ற சிலம்ப ஆசிரியர் தனசேகரன், நவ.14, 15, 16ல் புதுடில்லியில் நடந்த தேசிய குழந்தைகள் தினவிழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் விபுரோசன், செல்வநிதின், ஸ்ரீசுதர்சன், சிலம்பொலி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை பெண்கள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மோகனபிரியா டி.டி. விநாயகர் தொடக்கப் பள்ளி தாளாளர் வெங்கடாசலம், மாவட்ட மல்லர் கம்பம் கழக தலைவர் சுப்ரமணியன், பொருளாளர் சரவணசுந்தரம், மாவட்ட வளரி சங்க தலைவர் நாகேந்திரன், துணைத்தலைவர் ராமமூர்த்தி சிலம்ப ஆசிரியர்கள் புஷ்பராஜ். ஹரிஷ் ராகுல், ஸ்ரீராம்தேவதர்ஷன், கண்ணன், முகேஷ்குமார் பாராட்டினர். மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோக சுப்ரமணியன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!