தமிழகம்

செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை புதிய வழிதடத்தில் செல்லும் விரைவு ரயிலுக்கு இராஜபாளையத்தில் சிறப்பான வரவேற்பு கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை

44views
தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் பல அறிவிக்கப்பட்டது. அதில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு இராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு ரயில் இன்று முதல் துவங்கப்பட்டது. செங்கோட்டையிலிருந்து வருகை தந்த சிறப்பு ரயிலுக்கு இராஜபாளையம் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில்வே பயனாளர்கள் சங்கம் சார்பில் சுகந்தம் ராமகிருஷ்ணன் தலைமையில் ரயில் இன்ஜினுக்கு வாழை மரக்கன்றுகள், மாலை அணிவித்து ரயில்வே டிரைவர் ராமர், துணை டிரைவர் அருள்ராஜ், கார்டு இளங்கோ ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே செங்கோட்டை மதுரை வரை சென்ற ரயிலில் ஒன்பது பெட்டியில் உள்ளது ஆனால் தற்போது செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்வதால் அதிக பயணிகள் பயன்படும் வகையிலும் பயணி வசதிக்காக 20 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது பயணிகளுடைய கோரிக்கையாக உள்ளது.  தென்னக ரயில்வே பெட்டியில் எண்ணிக்கை உயர்த்தி பயணிகளுக்கு வசதி செய்து தர வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினார்கள்.  ரயில் பயனாளர்கள் சங்க செயலாளர் ஹரி, இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத் துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் நாராயண சாமி, செயற்குழு உறுப்பினர் வாசுதேவ ராஜா மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். ரயில் நிலைய அதிகாரி ஜெயபால் உள்பட பலரை பாராட்டினார்கள்.

செய்தியாளர் :  வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!