தமிழகம்

திருமங்கலத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய ஆடைகள் மற்றும் இனிப்புகள், வழங்கி கௌரவிப்பு – சமூக சேவகர்களுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் கௌரவிப்பு.

336views
முன்னாள் எம்பி சித்தன் கலந்து கொண்டு முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அன்னை வசந்தா டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், இப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் முன்னாள் எம்பி சீத்தன் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியோர்களுக்குபுத்தாடைகள் வழங்கினார்.மேலும் திருமங்கலம் பகுதியில் பல்வேறு சேவைப் பணிகளை செய்த சமூக சேவகர்களுக்கு சால்வை அணிவித்து கேடயமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.   மேலும், இத் தனியார் தொண்டு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தையும் முன்னாள் எம்.பி.சித்தன் திறந்துவைத்தார்.
செய்தியாளர் :  வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!