தமிழகம்

தென்காசியில் இந்தி திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

312views
தென்காசியில் இந்தி திணிப்பிற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து உரை நிகழ்த்தினர்.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பு அரசியலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் பாதுஷா, நூர் முஹம்மது, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி, நகர செயலாளர் ஷேக் ஜிந்தா மதார், சங்கரன்கோவில் நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முஹம்மது M.C, வடகரை பேரூராட்சி மன்ற உறுப்பினர் முத்து முஹம்மது M.C, முதலியார்பட்டி ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பாசுல் அஷ்ரப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர் செய்யது மஹ்மூத் துவக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். நகர தலைவர் சீனா, சேனா சர்தார் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!