தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

25views
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் அறந்தாங்கி,அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு தாமரைச்செல்வன் அவர்களுக்கு சாவித்திரிபாய் பூலே விருது வழங்கும் விழா 26/ 7/2026 அன்று அறந்தாங்கியில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பால் 21 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது.
அறந்தாங்கி ஐ எம் ஏ யின் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை வகித்தார். தமிழ் மாநில காங்கிரஸின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு கராத்தே கண்ணையன், வழக்குரைஞர் திரு வெங்கடேசன், சிபிஎம் இன் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் கவிவர்மன் , அறந்தாங்கி ஜமாத் தலைவர் திரு. TAN. பீர்சேக்,கே பி எஸ் எஸ் சி தலைவர் திரு சுப்பிரமணியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மனித உரிமைகள் அணியின் மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செலக்சன் பள்ளியின் தாளாளர் திரு சுரேஷ் குமார், தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் திரு VGS செந்தில்குமார் திரு முகமது ராவுத்தர் தனலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்விற்கு தொடக்க உரை திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தியும், வரவேற்புரை பொருளாளர் முபாரக் அவர்களும் நன்றியுரை முனைவர் சண்முகப்பிரியா அவர்களும் ஆற்றினர்.
விழாவிலே அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது. அதேபோல இந்த கல்வியாண்டில் அதிக தேர்ச்சி சதவீதத்திற்கு காரணமான அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு தாமரைச்செல்வன் அவர்களுக்கு சாவித்திரிபாய் பூலே விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!