தமிழகம்

சசிகலா புஷ்பா

431views
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பாக மேயராக 2011 முதல் 2014 வரை இருந்தவர் பின்னர் அதிமுகவில் அதிக நெருக்கம் காரணமாக 2014 ல் அதிமுக சார்பாக ராஜ்யசபாவில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி பிரச்சினை காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கபட்டார் இந்த சர்ச்சை அடுங்குவதற்க்கு முன் ராமசாமியை சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்டார். இதிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் உள்ளார் இதிலும் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக கட்சி உறுப்பினரால் பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஏற்பட்டு பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் இவர் MP யாக நியமனம் செய்யபட்ட பின்னர் இவருக்கு டில்லியில் தங்குவதற்க்கு மத்திய அரசால் வீடு ஒதுக்கீடு செய்ய பட்டது.
அவரது பனிகாலம் முடிவடைந்த 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும் படி அரசு அவருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது ஆனால் அவரை அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு அவரது குடியிருப்பிற்க்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா உள்ள நிலையில் அவரது அரசு குடியிருப்பை அரசு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர்: வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!