தமிழகம்

சமத்துவ பொங்கல் விழா

72views
மதுரை, சிம்மக்கல் நகர்புற ஆதரவற்றோர் தங்கும் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழாவிற்கு இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமை தாங்கினார். சிவனேஷன் முன்னிலை வகித்தார். உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் ஷேக்மஸ்தான் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர்கள் ரமேஷ், லோகேஷ்,மாற்றம் தேடி பாலமுருகன், அப்துல்கலாம் வழியில் செந்தில்குமார், மக்கள் தொண்டன் அசோக்குமார், சிம்மக்கல் ஆறுமுகசாமி ஆகியோர் சமத்துவ பொங்கலில் கலந்து கொண்டு வாழ்த்து கூறி, இல்ல முதியோர்களின் ஆசி பெற்றனர். சமூக சேவகர் நூருல்லா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை சமூக ஆர்வலர் ஜெயராமன் செய்திருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!