தமிழகம்

தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம் போன்ற எல்லா திட்டங்களையும் கட் செய்தால் திமுகவை மக்கள் கட் செய்து விடுவார்கள். ஆணவத்தின் உச்சமாக, சர்வாதிகாரத்தின் உச்சமாக திமுக அரசு உள்ளது – சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

49views
கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், புரட்சித்தலைவரின் 106 வது, பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கருப்பட்டியில் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார்.ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர்கள் முருகேசன், அசோக்குமார், வாடிப்பட்டி சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி.சரவணன், தலைமை கழக பேச்சாளர்கள் ரஜினி நிவேதா, இன்பகரன்ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.மற்றும் கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாவட்ட கழக நிர்வாகிகள் வக்கீல் தமிழ்ச்செல்வன், திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;
அதிமுகவின் வலிமையை பார்க்க அனைவரும் ஆவலோடு ஈரோடு இடைத்தேர்தலை எதிர்பார்த்து வருகின்றனர்.நிச்சயம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி வரலாறு படைக்கும்.ஏனென்றால் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆன்மாவின் ஆசி எடப்பாடியாருக்கு உள்ளது. நிச்சயம் எடப்பாடியார் வெற்றிக்கொடி நாட்டுவார்.அதிமுகவிற்கு வலிமை இருக்கிறது என்ற காரணத்தினால் திமுக தற்போது கூட்டணிக்கு விட்டுக் கொடுத்து உள்ளது.
எடப்பாடியார் கொண்டு வந்த 2,000 அம்மா மினி கிளினிக் மூலம், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் காய்ச்சல் ,தலைவலி என்று நோய்களுக்கு மருந்து எளிதாக கிடைத்தது .தற்போது அதை மூடிவிட்டு, மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை திமுக கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது, மருந்து கொள்முதல் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று எடப்பாடியார் கேள்வி எழுப்பி உள்ளார் .ஆனால் இதுவரை இத்துறையில் அமைச்சரின் பதில் சரியாக அளிக்கவில்லை
ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் சக்கர நோய், ரத்த அழுத்த நோய்களுக்கு கணக்கெடுக்கப்பட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.இதற்கு புதிய பெயர் சூட்டி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மடிக்கணினி திட்டத்தை அம்மா கொண்டு வந்தார்கள் கடந்த பத்தாண்டுகளில் 52 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றார்கள். அந்தத் திட்டத்தை தற்போது கட் செய்து விட்டார்கள் .அதேபோல் தாலிக்கு தங்கம் திட்டத்தையும
கட் செய்து விட்டார்கள்.அம்மா ஆட்சிக்காலத்தில் முதியோர் ஓய்வுத் தொகை 37 லட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டது.இதற்காக 4,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக 5 லட்சம் பேர்களுக்கு எடப்பாடியார் முதியோர் ஓய்வு திட்டத்தை வழங்கினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வுத் தொகையை 1,500 உயர்த்தி வழங்கும் என்று கூறினார்கள்.ஆனால் தற்போது அதையும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து கட் செய்து வருகிறார்கள். இப்படியே சென்றால் மக்கள் உங்களை சீக்கிரம் கட் செய்து விடுவார்கள்.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து வந்துள்ளனர் ஆணவத்தின் உச்சமாக, சர்வாதிகாரத்தின் உச்சமாக திமுக அரசு உள்ளது. அதிமுகவும்,திமுகவிற்கும் மூன்று சதவீத வாக்கு வித்தியாசம் என்பதை காட்டிலும், 43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்கு வித்தியாசம் பெற்றிருந்தால் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடியார் முதலமைச்சராக வந்து இருப்பார்.
பொங்கலில் கரும்பில்லாத பொங்கலாக இருந்ததை அனுமதிக்க மாட்டோம்என்று, மாபெரும் போராட்டத்தை நடத்த எடப்பாடியார் அறிவித்த போது, உடனடியாக முதலமைச்சர் அரசாணை வெளியிட்டு கரும்பு வழங்குவோம் என்று கூறினார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும். இந்த ஜல்லிக்கட்டு உரிமையை பெற்று தந்தது அதிமுக ஆகும். ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மைதானம் அமைக்கப்படும் என்று கூறி வருகின்றனர். பொதுவாக வாடிவாசல் வழியாகத்தான் காளைகளை அவிழ்த்து விடுவது காலங்கால மரபாகும். ஆனால் ஜல்லிக்கட்டு மைதானம் என்று சினிமா செட்டு போல் அமைப்பது கலாச்சாரத்திற்கு கேலிக்கூத்தாக அமையும்.அந்த அரங்கத்தில் பொம்மை காளைகள் தான் அவிழ்க்க முடியும்.
2021 ஆம் ஆண்டில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் எடப்பாடியார் வழங்கினார்.அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் தற்பொழுது ஆயிரம் ரூபாய் தான் வழங்கி வழங்கினார். 5,000 ரூபாய் கொடுக்க அவருக்கு மனமில்லை. இன்றைக்கு எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தால் நிச்சயம் 5,000 ரூபாய் பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கிருப்பார்.
ஆட்சிக்கு வந்த 18 மாதத்தில் ஒன்னரை லட்சம் கோடி கடமை வைத்துள்ளனர். இப்படியே சென்றால் கடன் சுமை அதிகரித்து விடும் .ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எடப்பாடியார் ஆதரவு தெரிவித்துள்ளார். எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியாரை முதலமைச்சர் ஆக்க மக்கள் அதிமுகவிற்கு வாக்கு அளிக்க தயாராகி விட்டனர் என்று கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!