சினிமா

இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்.

23views
தமிழ் திரைப்படங்களை இந்திய திரைப்பட வரைபடத்தில் தனி ஒருவராக இடம்பெறச் செய்த பெருமைக்குரியவர் பாரதிராஜா. இவரது திரைப்பட பாணி உலக சினிமாக்களின் உன்னதங்களை உள்வாங்கியது. அவரது ஷாட் அனைத்தும் கவிதையால் வடிவமைக்கப்பட்டது. பெரும்பாலும் புதியவர்களை நடிகர்களாக்கி, தனது ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் உலகையும் மனித உறவுகளையும் புதிய கோணத்தில் அணுகிய இவர், இயற்கை நிலப்பரப்புகளின் அழகை நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டினார்; அத்துடன், தமிழ் மண் சார்ந்த திரைப்படங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலான படைப்புகளை உருவாக்கினார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், கிழக்குச்சீமையிலே, அலைகள் ஓய்வதில்லை, கடலோரக்கவிதைகள் போன்ற உன்னத படைப்புகளை உருவாக்கி இருந்தாலும் அவரது தலை சிறந்த படைப்பு ‘முதல் மரியாதை’.
தனது படைப்புகளில் தமிழர்களின் வாழ்வை தொடர்ந்து காட்சிபடுத்தினார். தனது படைப்புகளின் மூலமாக சாதி, மதங்களுக்கு முற்றிலும் எதிர்மறையான கண்ணோட்டத்திற்கும் ஆழமான மனிதாபிமானத்திற்கும் இடையிலான ஒரு சமநிலையைக் கண்டடைந்தார்.
தமிழுக்கு மரியாதை செய்த மாபெரும் கலைஞன் இன்று விடை பெற்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!