சினிமா

பார்வையாளனை ஏமாற்றவில்லை இந்த மிருகங்கள் வாழும் இடம்

31views
இங்கு மிருகங்கங்கள் வாழும் இடம் : திரை விமர்சனம்
பொழுது போக்காக பார்க்கக் கூடிய சினிமாக்கள் சில நேரங்களில் நம்மை சமூக அக்கறையுடன் பார்க்க வைத்துவிடும். அப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது இந்தப் படம்.
தன் உலகமே மகள் தான் என வாழும் தந்தை. பாசமாய் வளர்த்த மகள் வளர்ந்து பெரியவளாகிறாள். மகளின் காதலன் போதைக்கு அடிமையான அரசியல் செல்வந்தரின் மகன். நண்பர்களுடன் சேர்ந்து வன்புணர்வின் ஈடுப்பட்டு காதலியை எரித்து விடுகிறான். மகளை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதிக்கு போராடும் தந்தைக்கு இந்த நீதிமன்றம் அநீதியையே தருகிறது. குற்றம் இழைத்தவர்களை சட்டம் தண்டிக்காவிட்டால் என்ன. முன்னாள் ராணுவ அதிகாரியான அந்த தந்தை எடுக்கும் பாசப்போராட்டம் தான் படத்தின் கிளைமாக்ஸ்.
அரசியல் மற்றும் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக சாமானியர்களின் குரல் ஏன் எடுபடாமல் போகிறது என்பதை காட்சிகளின் மூலம் புரியவைக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.
ஒரு சில காட்சிகள் கொஞ்சம் குழப்பத்தைத் தருகிறது.
ராணுவ வீரருக்கு துப்பாக்கியை பிடித்து சுடத்தெரியவில்லை என்பது ஆச்சர்யம். ஒரு சில குண்டுகளை வீணடித்தப் பின்னரே எதிரியை சுடுவதாகக் காட்டுவதில் நம்பகத்தன்மையை தவற விடுகின்றனர்.
படத்தில் தந்தையாக பைன் ஜான், மகளாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி உன்னிகிருஷ்ணன் இயல்பான நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.
கடைசிக் காட்சியில் கண் கலங்க வைத்து விடுகின்றனர்.
ஒளிப்பதிவும் , எஸ்.சசிகுமாரின் இயக்கமும் பரவாயில்லை ரகம்.
ராம் கோபியின் படத்தொகுப்பு படத்திற்கு பலவீனம் என்று சொல்ல முடியாது.
பாடல்கள் மனதை ஈர்க்கவில்லை. இசையில் கொஞ்சம் இரைச்சலை குறைத்திருக்கலாம்.
என்ன தான் ஒருசில குறைகள் தென்பட்டாலும் படம் பார்க்கும் பார்வையாளனை ஏமாற்றவில்லை இந்த மிருகங்கள் வாழும் இடம்.
விமர்சனம்: RJ நாகா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!