தமிழகம்

மதுரை மாநகராட்சி வருவாய் இனங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்:அமைச்சர்

210views
மதுரை மாநகராட்சி  நிதி மற்றும் வருவாய் இனங்கள் குறித்து மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னிலையில் பேராசிரியர். ரேமா ஹான்னா, ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட் அவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில், மாநகராட்சியில் நிதி மற்றும் வருவாய் இனங்கள் குறித்து , நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னிலையில் பேராசிரியர். ரேமா ஹான்னா, ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் ஆப் கவர்ன்மென்ட் ,  ஆலோசனை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.  மதுரை மாநகராட்சியில் நிதி மற்றும் வருவாய் இனங்களை மேம்படுத்துவது குறித்தும், சென்னை மாநகராட்சியில் நிதி நிலையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சில வழிமுறைகளை மதுரை மாநகராட்சியில் பின்பற்றுவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில், நகரப்பொறியாளர் அரசு, துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் (வருவாய்) மனோகரன், உதவி வருவாய் அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!