தமிழகம்

ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி வளாகத்தில் 74 வது குடியரசு தின கொடியேற்ற விழா

36views
தேனி மாவட்டம் பெரியகுளம் எண்டப்புலி அருகில் இருக்கும் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.  74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று கல்லூரி வளாகத்தில் இன்று ஜாமிஆ கல்லூரியின் முதல்வர் மெளலானா, M.M. முஹம்மது ஹுஸைன் மன்பஈ தலைமையில், துணை முதல்வர் மௌலானா,காஜி,S. அப்துல் அஹத் பாகவி மற்றும் தலைமை பேராசிரியர் மௌலானா,M. முஹம்மது ஷாஜஹான் பாகவி முன்னிலையில், கல்லூரியின் மூத்த பேராசிரியர் மௌலானா,M. ஜியாவுத்தீன் தாவூதி கொடி ஏற்றிவைத்தார்கள். கல்லூரியின் பேராசிரியர் மௌலானா,M. அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!