தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழா; நற்சான்று மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு

316views
தென்காசி மாவட்டம், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சமாதான புறாக்களை வானில் பறக்க விட்டார்கள். அதனைத்தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகி கி.லெட்சுமிக்காந்தன்பாரதி இ.ஆ.ப (ஓய்வு) மற்றும் சாவடி சொக்கலிங்கப்பிள்ளையின் வாரிசுதாரரான முத்தம்மாள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 47 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கங்களையும், வருவாய்த்துறை மற்றும் பிறத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 257 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். காவல்துறையில் சிறப்பாக செயலாற்றிய 20 காவலர்களுக்கும், தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 5 தீயணைப்பாளர்களுக்கும், வருவாய்த்துறையில் சிறப்பாக பணியாற்றிய 13 வட்டாட்சியர்களுக்கும், 5 துணை வட்டாட்சியர்களுக்கும், 1 மண்டல துணை வட்டாட்சியருக்கும், 1 மின்னாளுமை மேலாளருக்கும், 1 தலைமை நில அளவருக்கும், 21 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கும், 2 வருவாய் ஆய்வாளர்களுக்கும், 5 இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கும், 3 தட்டச்சர்களுக்கும், 1 சுருக்கெழுத்து தட்டசருக்கும், 2 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், 3 கிராம உதவியாளர்களுக்கும், 1 பதிவறை எழுத்தருக்கும், 3 அலுவலக உதவியாளர்களுக்கும், 1 தற்காலிக இளநிலை உதவியாளர்களுக்கும், 2 ஈப்பு ஓட்டுநர்களுக்கும், 1 திட்ட வல்லுநருக்கும், 2 பணியாளர்களுக்கும் (மாவட்ட ஆட்சியரின் உதவி மையம்), 1 பேரிடர் மேலாண்மை பிரிவு பணியாளருக்கும், 1 திட்டமிடல் பணியாளருக்கும் ( தேர்தல் பிரிவு), 1 தனி சார் ஆய்வாளருக்கும், 1 நில ஆவண வரைவாளர் உள்ளிட்ட 73 பணியாளர்களுக்கும், உதவி இயக்குநர் பேரூராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய 2 செயல் அலுவலர்களுக்கும், 1 உதவி பொறியாளருக்கும், 3 துப்புரவு பணியாளர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 1 உதவியாளருக்கும், 1 தட்டச்சருக்கும், கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 1 கூடுதல் கருவூல அலுவலருக்கும், 1 உதவி கருவூல அலுவலருக்கும், 1 கணக்கருக்கும், 1 இளநிலை உதவியாளருக்கும், 1 ஈப்பு ஓட்டுநருக்கும், பட்டு வளர்ச்சித் துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 தொழில்நுட்ப வல்லுநருக்கும், 1 உதவி ஆய்வாளருக்கும், 1 ஆய்வாளருக்கும், 1 இளநிலை உதவியாளருக்கும், 1 உதவியாளருக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 துணை வேளாண்மை அலுவலருக்கும், 1 உதவி விதை அலுவலருக்கும், 1 உதவி வேளாண்மை அலுவலருக்கும், 1 வட்டார தொழில் நுட்ப மேலாளருக்கும், 1 உதவியாளருக்கும் (பிணையம்), மாவட்ட நில அளவை அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 1 தலைமை வரைவாளருக்கும், 1 உதவியாளருக்கும், 1 வட்டத்துணை ஆய்வாளருக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 உதவி மருத்துவ அலுவலருக்கும் (சித்தா), 1 மருந்தாளுநருக்கும் (சித்தா), 1 பல்நோக்கு பணியாளருக்கும், நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான பராமரிப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 உதவி பொறியாளருக்கும், கூட்டுறவுத் துறை (பொது விநியோகத் திட்டம்) துறையில் சிறப்பாக பணியாற்றிய 2 கூட்டுறவு சார்பதிவாளருக்கும் (பொ.வி.தி), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 திட்ட இயக்குநருக்கும் (மகளிர் திட்டம்), 2 உதவி திட்ட அலுவலர்களுக்கும், 1 கண்காணிப்பாளருக்கும், 1 உதவியாளருக்கும், 1 வட்டார இயக்க மேலாளருக்கும், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 1 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கும், 1 புள்ளியியல் ஆய்வாளருக்கும், 1 வட்டார ஒருங்கிணைப்பாளருக்கும், 1 குழந்தை மைய பணியாளருக்கும், 1 குழந்தை மைய உதவியாளருக்கும், தொழில் வணிகத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 பொது மேலாளருக்கும், 1 உதவி பொறியாளருக்கும் (தொழில்கள்), 1 களப்பணியாளருக்கும், 1 சுருக்கெழுத்து தட்டச்சருக்கும், எமிரி கிரின் கெல்த் சர்வீஸ் (108) சிறப்பாக பணியாற்றிய அலுவலருக்கும், தோட்டக்கலைத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 2 தோட்டக்கலை உதவி இயக்குநர்களுக்கும், 1 இளநிலை உதவியாளருக்கும், 3 உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கும், நம்பிக்கை மையம் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 ஆலோசகர்களுக்கும், 2 ஆய்வக நுட்புநர்களுக்கும், 1 தரகு மேலாளருக்கும், கால்நடை பராமரிப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 உதவி இயக்குநருக்கும், 1 கால்நடை உதவி  மருத்துவருக்கும், 1 கால்நடை ஆய்வாளருக்கும் (நிலை 1), 1 கால்நடை பராமரிப்பு உதவியாளருக்கும், 1 உதவியாளருக்கும், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 1 சமூகப் பணியாளருக்கும், 1 புறத் தொடர்பு பணியாளருக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 4 தூய்மை பணியாளர்களுக்கும் (பிரிவு – 1,2,3,4), பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை 1 வட்டார மருத்துவ அலுவலருக்கும், 1 மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலருக்கும், 1 தொழில்நுட்ப நேர்முக உதவியாளருக்கும், 2 சுகாதார ஆய்வாளர்களுக்கும் (நிலை – 1,2), 1 கிராம சுகாதார செவிலியருக்கும், 1 மருந்தாளுநருக்கும், 1 ஆய்வக நுட்புனருக்கும், 1 செவிலியருக்கும், 1 இளநிலை உதவியாளருக்கும், 1 ஊர்தி ஓட்டுநருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிஅலகு துறையில் சிறப்பாக பணியாற்றிய 1 உதவி இயக்குநருக்கும் (தணிக்கை), 2 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், 1 உதவிப் பொறியாளருக்கும், 1 மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், 1 பணி மேற்பார்வையாளருக்கும், 1 கணக்கருக்கும், 1 உதவியாளருக்கும், 1 சாலை ஆய்வாளருக்கும், 1 இளநிலை உதவியாளருக்கும், 1 தட்டசருக்கும், 1 பதிவறை எழுத்தருக்கும், 1 அலுவலக உதவியாளருக்கும், 1 ஈப்பு ஓட்டுநருக்கும், 1 வட்டார ஒருங்கிணைப்பாளருக்கும், 1 கணினி உதவியாளருக்கும், 3 ஊராட்சி செயலர்களுக்கும், 5 தூய்மை காவலர்களுக்கும், வேளாண் அறிவியல் மையத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் ( பயிர் பாதுகாப்பு, தோட்டக்கலை), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை 1 உறைவிட மருத்துவ அலுவலருக்கும், 1 முதுநிலை உதவி மருத்துவருக்கும், 1 மனநல மருத்துவருக்கும், 2 முதுநிலை உதவி மருத்துவர்களுக்கும், 1 செவிலிய கண்காணிப்பாளருக்கும், 3 செவிலியர்களுக்கும், 1 மருந்தாளுநருக்கும், 1 ஆய்வக நுட்புநருக்கும், 1 மருத்துவமனை பணியாளருக்கும், 1 சுகாதார பணியாளர், 2 உதவியாளர்களுக்கும், 1 முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் பணியாளருக்கும், பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய 4 KRP மாவட்ட ஆசிரியர்களுக்கும், 10 எண்ணும் எழுத்தும் ஆசிரியர்களுக்கும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 1 இளமின் பொறியாளருக்கும், (நகர்புறம்1), 1 மின்பாதை ஆய்வாளருக்கும், ( நகர்புறம் 2), 2 கம்பியாளர்களுக்கும், (நகர்புறம்), 1 மின்பாதை ஆய்வாளருக்கும், ( நகர்புறம்) சுகாதார துறையில் 2 பணியாளர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 2 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தன்னார்வலர்கள் பிரிவில் சிறப்பாக  பணியாற்றிய 5 ரெட் கிராஸ் உறுப்பினர்களுக்கும், 3 மாஸ் கம்யூனிட்டி & பாரா மெடிக்கல் கல்லூரி தன்னார்வலர்களுக்கும், 1 தன்னார்வலருக்கும், 1 நிறுவனருக்கும் (பசியில்லா தமிழகம் அறக்கட்டளை) என மொத்தம் 257 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு  ரூ.54,790 மதிப்பிலும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.43,000 மதிப்பிலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.3000 மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.10,020 மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.13,500 மதிப்பிலும் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தொடர்ந்து, நேஷனல் நர்சரி & பிரைமரி பள்ளியின் மூலம் அணிவகுப்பு, ICI அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மூலம் இசை (பியானோ), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மூலம் கிராமிய நடனம் (அழிந்து வரும் நாட்டுப்புற கலைகள்), அரசு மேல்நிலைப்பள்ளியின் மூலம் பாரம்பரிய இசை ( எக்காளம்), ஸ்ரீராம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியின் மூலம் பிரமிடு, அரசு மேல்நிலைப் பள்ளியின் மூலம் வில்லிசை  ( சுற்றுச் சூழல் விழிப்புணர்வு), புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளியின் மூலம் கிராமிய நடனம் (நாட்டு வளங்கள் பற்றிய தேசப்பற்றுப் பாடல்) ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எ.த.சாம்சன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிநாடார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சு.தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தி.உதய கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்மலர், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) முரளி சங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் இரா.சுதா, தென்காசி வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!