தமிழகம்

நெல்லை தென்காசி பகுதிகளில் தமுமுக மமக சார்பில் இந்திய தேசத்தின் குடியரசு தினவிழா

217views
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தமுமுக-மமக சார்பில் இந்தியத் திருநாட்டின் 74-வது குடியரசு தினவிழா தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தென்காசியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு தமுமுக நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் களஞ்சியம் பீர், ஜாபர் உஷேன் ஜாபர் சரிப், அப்துல் ரஹ்மான், அல்முஸவ்வீர் TI WING, கோயா பீர், தாரிக் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் மைதீன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முகம்மது யாகூப், மமக மாவட்ட செயலாளர் சலீம், சுற்றுப்புற சூழல் அணி மாநில செயலாளர் நைனார் முஹம்மது, தலைமை கழக பேச்சாளர் கொலம்பஸ் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், மாநில தொண்டரணி து. செயலாளர் கோகோ.அலி, தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் ஆதம்பின் ஆஷிக், IPP மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப், மாவட்ட விளையாட்டு அணி து. செயலாளர் சிக்கந்தர் மஸ்தான் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போன்று கடையநல்லூர் நகர தமுமுக-மமக சார்பில் இந்திய தேசத்தின் 74-வது குடியரசு தின விழா நடந்தது. இதில் நகர தலைவர் முகம்மது பஸ்லி தலைமையில் கபையநல்லூர் மணிக்கூண்டு அருகில் இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட பொருளாளர் கடையநல்லூர் முகம்மது பாசித் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உறுதிமொழியை வாசித்தார். மனிதநேய தொழிற் சங்கம் (MTS) சார்பில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் மமக மாவட்ட துணை செயலாளர் செய்யது மசூது கொடியேற்றி வைத்தார். குடியரசு தின உறுதிமொழியை நகர தலைவர் முகம்மது பஸ்லி வாசித்தார். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் முகம்மது பஸ்லி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி பொருளாளர் சேகனா, திரிகூடபுர கிளை தலைவர் மைதீன், நகர பொருளாளர் முகம்மது அலி நகர துணை தலைவர் ரஹ்மத்துல்லா நகர துணை செயலாளர்கள் ராஜப்பா, ரஹ்மத்துல்லா, ஹாஜாமைதீன், MTS லத்தீப், MTS தலைவர் ஹாஜா, MTS சம்சுதீன், வார்டு நிர்வாகிகள் பாதுஷா, ரபீக்,ஹசன், முஜீப், மீராசா, இஸ்மாயில் மற்றும் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர். புளியங்குடி காயிதே மில்லத் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 13-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரி. முகைதீன் அப்துல் காதர் MC கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மமக மாநில செயற்குழு உறுப்பினர்கள் பஷீர் ஒலி EX MC, முகம்மதலி மற்றும் ஜமாத் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவான மனிதநேய ஆட்டோ தொழிலாளர் சங்கம்‌ சார்பில் இந்தியாவின் 74- வது குடியரசு தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவரும் நெல்லை மாநகராட்சி மாமன்ற 50- வது வார்டு உறுப்பினருமான K.S ரசூல் மைதின் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், தமுமுக மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா, மமக மாவட்ட துணைச் செயலாளர் அ.காஜா, பகுதி மமக செயலாளர் E.M. அப்துல் காதர், பகுதி தமுமுக செயலாளர் பாதுஷா, பொருளாளர் அசன் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் குதா முகம்மது, MTS மாவட்ட செயலாளர் நாகூர் மீரான், ஊடக அணி மாவட்ட செயலாளர் செய்யது அப்துல் காதர், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் சேக் மதார், ஐபிபி மாவட்ட பொருளாளர் அப்துல் அஜீஸ், சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஸ்டிக்கர் காஜா, 46 வது வார்டு தலைவர் ராஹத் செய்யது அலி, MTS நிர்வாகிகள் வெல்கம் அலி கருப்பசாமி,ரிபாய், பாத்திமா மைதின், சகாப்தீன், அர்சத் பாஷா மதரஸா மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!