தமிழகம்

நியாய விலைக்கடை விற்பனையாளருக்கு ரூ.63 ஆயிரம் அபராதம்

36views
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் காந்தி நகர் நியாய விலைக்கடையை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று ஆய்வு செய்தார். அங்கு பதிவேட்டில் உள்ளபடி உணவு பொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இதில் 2,150 கிலோ அரிசி குறைவு கண்டறியப்பட்டது. துவரம் பருப்பு 180 கிலோ இருப்பை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து விற்பனையாளர்களிடம் விவரம் கேட்டறிந்து, உணவுப் பொருட்களின் குறைவுக்காக ரூ.63 ஆயிரத்து 200 அபராதம் விதித்து அரசு கணக்கில் செலுத்த விற்பனையாளருக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.
தேவிபட்டினம், பெரிய கடை வீதியில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று உணவுப் பொருள்கள் இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அங்கிருந்த பொதுமக்களிடம் நியாய விலை கடையிலிருந்து உணவுப் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்ததுடன் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என பணியாளருக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.  மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், ராமநாதபுரம் வட்ட வழங்கல் அலுவலர் தமீம் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!