தமிழகம்

நியாயவிலைக் கடைகளில், ஆட்சியர் திடீர் ஆய்வு

103views
சிவகங்கை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட  நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் உள்ள கடை எண்:1 மற்றும் ஓ.புதூர், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சுள்ளங்குடி ஆகியப்பகுதிகளில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் தமிழக அரசால் வழங்கப்படும் குடிமைப்பொருட்கள் அனைத்தும் நியாய விலைக்கடைகளின் மூலம் முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 660 முழுநேரம் மற்றும் 204 பகுதிநேர நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக, 4,20,792 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.  மாவட்டம் முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிமைப்பொருட்களின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை. மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடையளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து, மாதந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நியாய விலைக்கடைகளுக்கு வருகை தரும் குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்டறியப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகள், தொடர்பாக, சிவகங்கை நகரில் உள்ள கடை எண்:1 மற்றும் ஓ.புதூர், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சுள்ளங்குடி ஆகிய நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார்.  மேலும், பொதுமக்களுக்கு நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வழங்கிய பிறகு முறையாக கைபேசியில் தகவல் வருகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டு, நியாய விலைக்கடைகளில் முதலுதவிப்பெட்டி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதி இல்லாத நியாயவிலைக்கடைகளில், உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  மேலும், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று ஆய்வு செய்து, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை, முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து, ஆகிய குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்து, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கும்படி அங்கிருந்த மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர், அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரத்தினவேல் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.விஜய்சந்திரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!