தமிழகம்

ராமநாதபுரம் பேருந்து நிலைய கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு

34views
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உட்கட்டமைப்பு,  அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று ஆய்வு செய்தார். பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பழைய பேருந்து நிலையத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மின் விளக்கு, குடிநீர், கழிவறை பணிகளையும் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புற நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், உதவி ஆட்சியர் நாராயண சர்மா, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் , ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜீதா பர்வீன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!