தமிழகம்

நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ரேபீஸ் நோயை தடுக்க செல்லப் பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் ஹார்விபட்டியில் நடைபெற்றது

63views
மத்திய அரசு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் வெறிநாய் தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றத்தில் அருகே உள்ள ஹார்விபட்டியில் தெருநாய்கள், மற்றும் வீட்டில் உள்ள நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வெறிநோய்கான ரேபீஸ் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைக் கொண்டு வந்து இலவசமாக வெறிநோய் தடுப்பூசியை நாய்களுக்கு செலுத்திக்கொண்டனர்.

மேலும் ரேபிஸ் நோயை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்த முகாம் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட வெறி நோய் தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதனால் தமிழக அரசு ஏற்று நடத்தி வருகிறது. மேலும் கால்நடை மருத்துவமனைகளிலும் தொடர்ந்து ரேபிஸ் தடுப்பூசிகள் போடலாம் எனவும் என கால்நடை உதவி இயக்குநர் Dr. கிரிஜா கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!